திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி - பரிசை வென்ற உடுமலை விவசாயி!

திருப்பூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற உடுமலை விவசாயிக்கு குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழா முன்னிட்டு வருடத்தோறும் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு குடியரசு தின விழா அன்று பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ள சம்பந்தப்பட்ட தாலுக்காவில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் 100 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், இந்த நிலையில் உடுமலை அருகே உள்ள ஆலம்பாளையம் பகுதியில் விவசாயி பழனிச்சாமி பயிர்விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டார்.

அதிகாரிகளின் களஆய்வுக்குபின் மக்காச்சோளம் சாகுபடியில் அதிகப்படியான மகசூல் எடுத்த காரணத்தால் திருப்பூர் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் உடுமலை விவசாயி இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற விவசாயி பழனிசாமிக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இதேபோல், மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் முதலிடம் பிடித்த பொங்கலூர் வட்டாரம் அம்மாபாளையம் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜூக்கு பத்தாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் ஆட்சியரால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வினித் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...