கோவையில் போலீஸ் எனக் கூறி இரும்பு வியாபாரியிடம் பணம் பறிப்பு - 2 பேர் கைது

கோவை ஒண்டிப்புதூர் அருகே போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி இரும்பு வியாபாரியிடம் பணம் பறித்த தனியார் நிறுவன காவலாளி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது54). இவர் இருகூர் சாலையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் அவரது கடைக்கு வந்த இரண்டு பேர், தங்களை போலீஸ் அதிகாரி எனக் கூறி அறிமுகம் ஆகியுள்ளார்.

மேலும், சிவலிங்கத்திடம், கடையில் திருட்டுப் பொருட்களை வாங்கி வைப்பதாக புகார் வந்ததுள்ளது அது உண்மையா? என விசாரணை நடத்துவதுபோல் அந்த நபர்கள் பேசியுள்ளனர். ஆனால், அவ்வாறான பொருட்கள் வாங்குவது இல்லை என சிவலிங்கம் கூறிய நிலையில், போலீஸ் அதிகாரி என கூறிய நபர்கள் ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, சிவலிங்கமும் ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்குவந்த இரும்புக்கடை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் சிவலிங்கம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர்கள், இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு போலீஸ் அதிகாரி எனக் கூறி பணம் பறித்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது பிடிபட்ட நபர்கள் போலியான போலீஸ்காரர்கள் என்பது தெரியவந்தது.



மேலும், அதில் ஒருவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தங்கமணி (வயது57), என்பதும், அவர் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வந்தததும், மற்றொரு நபர் கோவை அண்ணா நகரை சேர்ந்த பூபதிகுமார் (49), என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் தங்களை போலீஸ் அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பில் ஈடுபட்டதும் உறுதியானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...