வாகனங்களுக்கு மாற்று எரிசக்தி.. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி மிச்சமாகுமா? - காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் தகவல்!

சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி வாகனம் இயக்கினால், நாட்டிற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாக வாய்ப்பிருப்பதாக அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் தகவல்.


கோவை: கோவை காளப்பட்டியில் தனியார் ஒட்டலில் ,காற்றாலைகள் வளர்ச்சி குறித்து அகில இந்திய விண்ட் மில் ஆசோசியசேன் சார்பில் "மைண்ட் ஆப் விண்டு" என்ற புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.



இதில் கலந்துகெண்டு புத்தகத்தை வெளியிட்ட அகில இந்திய காற்றாலை உற்பத்தியாளர் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், உலகம் உள்ளவரை காற்றும் , சூரியனும் இருக்கும் என்பதால் இதுபோன்ற இயற்கை சக்தியை பயன்படுத்தி இந்தியா மாற்று எரிசக்தி பயன்படுத்தி மின்சார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நாடு முழுவதும் சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை பயன்படுத்தி வாகனம் இயக்கினால், வெளி நாடுகளில் இறக்குமதி செய்யும் பெட்ரோலுக்கு செலவு செய்யப்படும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும். மாசற்ற சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி என்பது உலகிற்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது.

இதன்மூலம் சுற்றுசுழல் பாதிக்காதவாறு நமது மின்பயன்பாடு இருக்கும். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் காற்றாலை மின் உற்பத்திக்கு மானியம் என்பதை விட acceleration depreciation தொகையை 40% இருந்து 80% ஆக உயர்த்த வேண்டும்.

இதன் மூலம் நாட்டில் சூரிய மற்றும் காற்றாலை தொழில்முனைவோர்களின் முதலீடும் அதிகரிக்கும் என்று கஸ்தூரி ரங்கையன் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...