வாள் கேடயத்தை 3 மணிநேரம் சுழற்றி உலக சாதனை - கோவை மாணவிக்கு குவியும் பாராட்டு!

கோவையில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவி இரண்டரை கிலோ எடை கொண்ட வாள் கேடயத்தை தொடர்ந்து 3மணி நேரம் சுழற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.



கோவை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு கலைகளில் வாள் கேடய வீச்சு முக்கிய விளையாட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் விதமாக கோவையில் தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் தமிழ் பாரம்பரிய கலைகளில் உலக சாதனை புரிந்து வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, கோவையை சேர்ந்த கார்த்திக்-லாவண்யா தம்பதியரின் மகள் சஞ்சவி. 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சஞ்சவி, வீரக்கலையான இரண்டரை கிலோ எடை கொண்ட வாள் கேடயத்தை தொடர்ந்து 3 மணிநேரம் 9 நிமிடங்கள் 5 விநாடிகள் சுழற்றி இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.



வீரத்திலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் செய்த சஞ்சவியின் இந்த சாதனையை இந்தியா, அமெரிக்கன் மற்றும் யுரோப்பியன் என மூன்று உலக சாதனை புத்தகங்கள் அங்கீகரித்து சஞ்சவிக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...