குற்றவாளிகளை தட்டி தூக்கும் டைகருக்கு பிறந்தநாள் - முதுமலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காக வளர்க்கப்பட்டு வரும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


நீலகிரி: முதுமலையில் வனக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் மோப்பநாய் டைகரின் 2-வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் வன குற்றங்களை கண்டுபிடிக்கும் விதமாக முதுமலையில் பிரேத்யேக பயிற்சி பெற்ற டைகர் எனப்படும் மோப்பநாய் வளர்க்கப்பட்டு வருகிறது.



இந்த நாய் இதுவரை 13 வன குற்றங்களை கண்டுபிடித்துள்ளது.



பிறந்து ஆறு மாத குட்டியாக முதுமலை கொண்டுவரப்பட்ட இந்த நாய்க்கு நேற்று 2-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.



முதுமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் வித்யா தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒன்று கூடி கேக் வெட்டி அந்த மோப்ப நாய்க்கு ஊட்டி மகிழ்ந்தனர்.



அப்போது சுற்றி இருந்த வனத்துறையினர் "ஹாப்பி பர்த்டே டைகர்" என கைத்தட்டி பாட்டுப்பாடி வாழ்த்துத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...