தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் நோய்த்தடுப்புக்கான மருந்துக்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான அனைத்து தடுப்பு மருந்துக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.



கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். பன்றிக்காய்ச்சலுக்கான டாமிபுளூ மாத்திரைகள் போதுமான அளவில் அரசு மருத்துவமனையிலும், சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 



மேலும் மக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சோப் மூலம் கைகளை நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 12 முறைகளாக கழுவ வேண்டும் என்பதை மாணவர்களிடம் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரூபெல்லா மற்றும் தட்டமைக்கான தடுப்பூசிகள் போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...