'தலைக்கவசம் இனி கட்டாயம்..!' - 15 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு!

கோவை மாநகரில் 100 சதவீதம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தும் வகையில், 15 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


கோவை: வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வலியுறுத்தி கோவையில் 15 சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அதனை கடுமையாக்கும் வகையில் இன்று ஒரு நாள் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து, ரூ.1000 அபராதம் மற்றும் 3 மணி நேரம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தான விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும் என கோவை மாநகர போலீசார் அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை முதல் கோவை மாநகரம் முழுவதும் காளப்பட்டி சாலை, கொடிசியா, நவ இந்தியா சந்திப்பு, ராமகிருஷ்ணா கல்லூரி, சக்தி ரோடு, துடியலூர் சாலை, காந்திபுரம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, பேரூர் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, திவான் பகதூர் சாலை ஆகிய 15 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சோதனை சாவடிக்கும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், நவ இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் மாநகர போலீஸ் ஆணையர் பாலகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்களைப் பிடித்து அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, 3 மணி நேரம் விழிப்புணர்வு வகுப்பும் எடுக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...