கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமவாய்ப்பு மையம் - தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் நேரில் ஆய்வு!

கோவையில் சமவாய்ப்பு மையத்தை தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குநர் கிரிராஜ் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு கிடைக்கப்பெற்ற வேலைவாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.


கோவை: தேசிய சமூக பாதுகாப்பு நிறுவன இயக்குனர் கிரிராஜ் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சம வாய்ப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டார்.

அங்கு ஆய்வு மேற்கொண்ட அவர், தற்போதுவரை மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு கிடைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும், வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு செயல்கள் குறித்தும் கேட்டறிந்தார்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த கிரிராஜ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் "பெண் குழந்தைகளை காப்போம்" "பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிட்டனர்.

இனிவரும் நாட்களில் அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...