'நிதி மோசடி நிறுவனம் குறித்து புகார் அளிக்கலாம்..!' - பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுரை

கோவையில் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் அறிவுறுத்தல்.


கோவை: கோவையில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணத்தை கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மாநகர பொருளாதார குற்றபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை சாய்பாபாகாலனி ராமலிங்கம் நகர், பகுதியில் செயல்பட்டு வந்த டீரிம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெற்று இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி, இதுவரை 50,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பல கோடி மோசடி செய்ததாக கோவைப் பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பொருளாதார குற்றப்பிரிவை அணுகித் தகுந்த ஆவணங்களுடன் புகார் செய்து கொள்ளும் பட்சத்தில் விரைவில் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...