கோவை தடாகம் சாலையில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

கோவை தடாகம் சாலையில் அதிக பாரத்துடன் சென்ற லாரி, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு.


கோவை: கோவை தடாகம் ரோட்டில் சிவாஜி காலனி, கே.என்.ஜி புதூர் உட்பட பல்வேறு பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல இடங்களில் குழி தோண்டப்பட்டது. சில இடங்களில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. சரியாக குழாய் பதிக்காமல், குழியை முழுவதும் மூடாமல் அறைகுறையாக விட்டுவிட்டனர்.

இந்நிலையில் அந்த சாலை வழியாக இரும்பு கம்பி லோடு ஏற்றிச் சென்ற லாரி, இடையர்பாளையம் அருகே வந்த போது குழாய் பதிக்கப்பட்டு மூடிய குழியில் இறங்கியது. இதையடுத்து அதிக பாரத்துடன் நிற்கும் லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

லாரி சிக்கி இருந்த இடத்தின் பக்கவாட்டு பகுதியில் செல்ல முயன்ற பழைய இரும்பு ஏற்றி வந்த ஆட்டோ ஒன்றும் பாரம் தாங்காமல் பள்ளத்தில் சிக்கியது. இதன் காரணமாக தடாகம் சாலையில் கோவில்மேடு இடையர்பாளையம் இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினரோ குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களோ வராததால் அப்பகுதியைச் சேர்ந்தவர்களே போக்குவரத்தை சீர் செய்யும் நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...