குன்னூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல் - ஒருவருக்குக் கத்திக்குத்து!

குன்னூரில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்குக் கத்தி குத்து. குன்னூர் அரசு மருத்துவமனையில் மாணவருக்கு சிகிச்சை.



நீலகிரி: தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசு உதவி பெற்று வரும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவர்கள் மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவர் கத்தியால் மற்றொரு மாணவரைக் குத்தியுள்ளார்.



இதில் காயமடைந்த மாணவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அங்கு அவருக்கு முதுகு பகுதியில் ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பர் குன்னூர் காவல்துறையினர் கத்தியால் தாக்கிய மாணவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்னூரில் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...