கோவையில் மனைவி கண்முன்னே பேருந்து சக்கரத்தில் பாய்ந்து கணவர் தற்கொலை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

கோவையில் மனைவியின் கண்முன்னே அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் பட்டப்பகலில் மனைவி கண்முன்னே அரசு பேருந்து சக்கரத்தில் பாய்ந்து கணவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை சித்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் - மஞ்சுளா தம்பதி. இவர்கள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பார்க்க அரசு பேருந்தில் சென்றுள்ளனர்.

இருவரும் வரதராஜபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய நிலையில், பேருந்து புறப்படும் போது, பாலமுருகன் தனது கையில் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு, திடீரென பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் பாய்ந்தார்.



அவர் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பாலமுருகன் உயிரிழந்தார்.

மனைவி கண்முன்னே நிகழ்ந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...