லண்டன் விமான நிலையத்தில் நடிகர் அஜித் - வைரலாகும் வீடியோ..!

லண்டன் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்க்கும் வரிசையில் நின்றிருக்கும் நடிகர் அஜித்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


லண்டன்: நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் தினத்தையொட்டி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனைதொடர்ந்து, நடிகர் அஜித் தனது அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.



இந்நிலையில், லண்டன் விமான நிலையத்தில் நடிகர் அஜித், வரிசையில் நின்றிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



சமீபத்தில் தனது பைக்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்தின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்ட நிலையில், லண்டன் விமான நிலையத்தில் நின்றிருக்கும் இந்த வீடியோ அஜித் ரசிகர்களால், அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...