சாலை பணிகளால் பாதிக்கப்படும் விளைநிலங்கள் - வாகனங்களை சிறைப்பிடித்த உடுமலை மக்கள்!

திருப்பூர் உடுமலை வழியாக நடைபெறும் நான்கு வழி சாலை பணிக்காக செல்லும் கனரக வாகனங்களால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி சின்னவீரன்பட்டி அருகே பொதுமக்கள் கனரக வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்.



திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் வகையில், 1500 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டி அடுத்த ஆர்.கே.ஆர் பள்ளி பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இரவு பகலாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.



குறிப்பாக தென்னை, வாழை மரம், மல்பெரி செடிகள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் மண் தூசியின் காரணமாக மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



தூசி உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் விதமாக சாலைகளில் தண்ணீர் ஊற்றி விட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இரண்டு நாளில் சம்பந்தப்பட்ட கனரக ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...