திருப்பூரில் 19ஆவது புத்தக திருவிழா தொடக்கம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பாக 19ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சர்கள் சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைப்பு.


திருப்பூர்: திருப்பூரில் 19ஆவது புத்தக திருவிழா தொடங்கியது. இது 10நாட்கள் நடைபெறவுள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் ஆகியவை சார்பில் 19ஆவது புத்தகத் திருவிழா காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் உணவகத்தில் இன்று துவங்கியது.



செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் புத்தக திருவிழாவைத் துவக்கி வைத்தனர். இதில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் பங்கேற்றனர்.



வரும் பிப்.5ஆம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 150 அரங்குகளில் 126 புத்தக விற்பனை அரங்குகள் மற்றும் 24 அரசுத்துறை சார்ந்த அரங்குகள் இடம் பெற்று உள்ளன.



புத்தக விழாவில் சாகித்ய அகாடமி, என்.சி.பி.எச், காலச்சுவடு, கிழக்கு, கௌரா, விகடன், பாரதி, விஜய பாரதம், விஜயா, தமிழினி, உயிர்மை, பெரியார் சுயமரியாதை, அறிவியல் பலகை, ஆரோக்கியா புக்ஸ், சூரியன் பதிப்பகம், இந்து தமிழ் திசை, சக்சஸ் புக்ஸ், புக் வேர்ல்ட், புக்பார் சில்ட்ரன் உள்ளிட்ட தமிழகத்தின் முன்னணி புத்தகப் பதிப்பகங்கள், விற்பனையாளர்கள் கண்காட்சியில் பங்கேற்று தங்கள் பதிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.



புத்தக திருவிழாவில் வாங்கும் புத்தகங்கள் அனைத்துக்கும், குறைந்தபட்சம் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.



ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் பள்ளி மாணவ, மாணவிகள் குலுக்கல் முறையில் 10 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்படும். புத்தகத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் மாலை கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...