கோவை இடையர்பாளையம் பகுதியில் குட்கா பதுக்கல் - ஒருவர் கைது!

கோவை இடையர்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருந்த ஒருவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 216 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: இடையர்பாளையத்தில் குட்கா பதுக்கி வைத்திருந்த ஒருவரை துடியலூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 216 கிராம் குட்கா பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

அதன் அடிப்படையில், நேற்று துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர் குருச் சந்திர வடிவேல் மற்றும் காவலர்கள் இடையர்பாளையம் அருகே உள்ள திருவள்ளுவர் நகர் பகுதிக்கு விரைந்து சென்று கடையில் சோதனையிட்டனர்.

அப்போது, ரவீந்திரன் என்பவர் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 216 கிராம் எடையுள்ள குட்காவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...