கோவையில் தலைக்கவசம் அணியாமல் பயணம் - 937 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், தலைக்கவசம் அணியாமல் வந்த 937 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 937 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் 100 சதவீத கட்டாயத் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில், ஜன.27ம் தேதி மாநகரின் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் சோதனையிடப்படும் என கடந்த 24ம் தேதி மாநகர காவல்துறை அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை கோவை மாநகர காவல்துறை சார்பில் 15 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டன.



அவற்றில், 1,282 வாகனங்களில் தலைக்கவசம் இன்றி வந்தவர்களில் 937 பேர் மீது போக்குவரத்து சட்டவிதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 345 பேர் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த 2543 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த 1282 பேர் என மொத்தம் 3875 பேருக்கு போக்குவரத்து சட்டவிதிகள் பற்றியும், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...