கோவை வேளாண் பல்கலை.-யில் ஜன.28 முதல் 30 வரை பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் போன்ற பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்காக மொத்தம் 2036 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 2025 விண்ணப்பங்கள் தகுதியானவைகளாக கருதப்பட்டு அவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பட்டய படிப்புகளுக்கான இணையதள கலந்தாய்வு 28.01.2023 முதல் 30.01.2023 வரை நடைபெறவுள்ளது.

இணையதள கலந்தாய்வு தொடர்பான விரிவான தகவல் தகுதியுள்ள அனைத்து விண்ணப்ப தாரர்களுக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணையதள கலந்தாய்வின் போது விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்களிடமிருந்து கட்டணம் பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் tnau.ucanapply.com என்ற வலைத்தளம் மூலம் உள் நுழைந்து 28.01.2023 முதல் 30.01.2023 மாலை 5 மணி வரை தங்கள் கல்லூரி மற்றும் விருப்ப பாடங்களை மாற்றிக் கொள்ளலாம்.

இறுதியாக உறுதி செய்யப்பட்ட விருப்பம், கல்லூரி மற்றும் பாட இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படும். இது குறித்த தெளிவான படிப்படியான செயல்முறை விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு 01.02.2023 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெறும். கலந்தாய்விற்கான வழிமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை www.tnau.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.

இதன் பொருட்டு ஏதேனும் விவரங்கள் தேவைப்பட்டால் 0422-6611345 என்ற தொலைபேசி வாயிலாகவும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...