கூட்டுறவு அங்காடிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை - கோவை தென்னை விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்.


கோவை: நியாயவிலைக்கடை மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் சத்துக்கள் மிகுந்த உணவு பொருட்கள் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இது மானியமாக விற்கப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து 72 % எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கு பெருமளவில் மக்கள் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இதற்குப் பதிலாக தேங்காய் எண்ணெயை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்.



வெளிநாடுகளில் இருந்து தேங்காய் புண்ணாக்கை இறக்குமதி செய்து அதிலிருந்து தேங்காய் எண்ணெய் எடுக்காமல் அராங்கங்களே நேரடியாக தென்னை விவசாயிகளிடமிருந்து தேங்காயை கொள்முதல் செய்து எண்ணை தயாரித்து, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலமாக விற்க வேண்டும்.

இதன் மூலம் அந்நிய செலாவணி குறைந்து உள்நாட்டு தென்னை வர்த்தகம் பொருளாதாரம் மேம்படும் என்று தென்னை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

விலை வீழ்ச்சியால் நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் விதமாக, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...