ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு கலைஞர் பெயரை சூட்டுங்கள்..! - கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட கோரி திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சார்பில் கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கோவை: ராமநாதபுரம் மேம்பாலத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று கோவையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கோவை - திருச்சி சாலையில் ராமநாதபுரம் பகுதியில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேம்பாலம் கடந்த ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.



இந்த மேம்பாலத்திற்கு எந்த பெயரும் வைக்காததால், தற்போது “கலைஞரின் தமிழ்நாடு மேம்பாலம்” என்ற பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.



திமுகவை சேர்ந்த ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.

அவர் இங்கிருக்கும் போது திரைப்படங்களுக்கான வசனங்கள், அரசியல் முன்னெடுப்புகள் ஆகியவை இங்கிருந்து தான் துவங்கியது. ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் வரை வழக்கமாக அவர் நடந்து செல்லும் வழியாக இருந்தது.

மேலும் பல்வேறு திட்டங்களை அவர் முதல்வராக இருந்தபோது கோவைக்கு வழங்கி உள்ளார். எனவே தற்போது அவர் வாழ்ந்த இந்தப் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...