சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்வர் விருது - திருப்பூர் ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு!

தமிழ்நாட்டின் தலை சிறந்த காவல் நிலையங்களில் முதல் காவல் நிலையமாக முதலமைச்சரின் விருதை பெற்று வெற்றிக் கோப்பையுடன் திருப்பூர் வந்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு காவலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


திருப்பூர்: சிறந்த காவல் நிலையத்திற்கான முதல்வர் விருதுக்கு, திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தேர்வாகியுள்ளது.

திருப்பூர் மாநகர காவல் நிலையங்களில் ஒன்றாக உள்ளது வடக்கு காவல் நிலையம். இந்த காவல் நிலையமானது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தின் அருகிலேயே கொடிகாத்த குமரன் நினைவகமும் ரயில் நிலையமும் செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் அதிகம் இருக்கும் பகுதியாகும். 2009 ம் ஆண்டு திருப்பூர் மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த காவல் நிலையத்தில் எல்லைகள் வரையறை செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. வடக்கு காவல் நிலையத்தில் இதுவரை இருந்த காவல் ஆய்வாளர்கள் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பான காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக முதலமைச்சரின் கேடயமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2021-2022 ஆம் ஆண்டில் தமிழகத்திலேயே சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகள், களவு சொத்துக்கள் மீட்பு என 95 சதவிகிதம் வழக்குகளை முடித்து தமிழகத்தின் தலை சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தை தமிழக அரசு அறிவித்தது.



ஜனவரி 26 ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமாருக்கு முதல் பரிசுக்கான கோப்பையை வழங்கி சிறப்பித்தார்.



முதல் பரிசுக்கான கோப்பையை பெற்று திருப்பூருக்கு வருகை தந்த வடக்கு காவல் ஆய்வாளர் உதயகுமாருக்கு சக காவலர்கள் மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் சக காவலர்கள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட கோப்பையை எடுத்துப்பார்த்து உற்சாகம் அடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...