கோவையில் 19 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 3 தேர்வு - 57.73 சதவீதம் பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி - குரூப் 3 தேர்வு கோவையில் 19 மையங்களில் நடைபெற்றது. இதில் 57.73 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.



கோவை: கோவையில் 19 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் -3 தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாட்டின் அரசாங்க காலி பணியிடங்களுக்கு டி என் பி எஸ் சி மூலமாக தேர்வு நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு இன்று நடைபெற்றது.



தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு மையங்களுக்குள் சென்றனர். 9.30 மணிக்கு வினாத்தாள்கள் தரப்பட்டு தேர்வு எழுத ஆரம்பித்தனர்.



நண்பகல் 12:30 மணி வரை தேர்வு நடந்த நிலையில், 12.45 மணிக்கு கிராஸ் செக்கிங் முடித்து தேர்வர்கள் மையங்களில் இருந்து வெளியே வந்தனர்.

தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த தேர்வர்கள், குரூப்-3 தேர்வை சிறப்பாக எழுதியுள்ளோம். குறிப்பாக தமிழ், பொருளாதாரம், பொதுஅறிவு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் இலகுவாக கேட்கப்பட்டிருந்தது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு புத்தகங்களில் இருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. முந்தைய தேர்வுகளை விட இலகுவான கேள்விகள் தேர்வில் கேட்கப்பட்டு இருந்தது, என்றனர்.

கோ-ஆப்பரேட்டிவ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பதவிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. கோயமுத்தூரில் 19 தேர்வு மையங்களில் 5,954 நபர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். வழக்கத்தை விட அதிக அளவிலான நபர்கள் தேர்வு எழுத வரவில்லை.

குறிப்பாக 2018 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 3,436 பேர் தேர்வு எழுத இன்று வரவில்லை. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 42.23 % சதவிகிதம் மட்டுமே தேர்வு எழுதினர், மீதமுள்ள 57.77 % தேர்வு எழுத வரவில்லை. கடந்த காலங்களைவிட இந்த ஆப்சென்ட் விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...