ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு யார் கட்சி என்று தெரியும்..! - ஒபிஎஸ் அணி அமலன் சாம்ராஜ் பதிலடி!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் யார் கட்சி, குழு என்பது இடைத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் பதிலடி.


சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்குப் பிறகு யாருக்குக் கட்சி எனத் தெரிந்து விடும் என எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளருமான அமலன் சாம்ராஜ் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், ஓபிஎஸ் அணியைச் சார்ந்த எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அமலன் சாம்ராஜ் பிரபாகரன் ஓபிஎஸை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் அணி என்பது ஒரு குழு, கட்சி அல்ல என கூறியிருந்ததற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகாக யார் அணி, கட்சி, குழு என்பது தெரிந்துவிடும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆருக்குத் திண்டுக்கல் தொகுதி மாற்றத்தைக் கொடுத்தது போல், இபிஎஸுக்கும் ஈரோடு கிழக்கு மாற்றத்தைக் கொடுக்கும் என சொல்லி இருப்பது எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. கோடு போட்ட பூனைகள் எல்லாம் புலியாகி விட முடியாது.

விரைவில் தங்கள் தலைவர் ஓபிஎஸ் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு, தகுதி உள்ள வேட்பாளரை அறிவிப்பார், அவர்தான் வெற்றி வேட்பாளராக இருப்பார் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...