கோவை விமான நிலையத்தில் புதிய திட்டம் அமல் - முதியோர், குழந்தைகள், மகப்பேறு பெண்களுக்கு தனிக்கவனம்!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, கோவை விமான நிலையத்தில் முதியவர்கள், மகப்பேறு பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி பயணிப்பதற்கு தனிக்கவனம் செலுத்தும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


கோவை விமான நிலையத்தில் தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், கோவை விமான நிலையத்துக்கு வரும் முதியவர்கள், மகப்பேறு பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்ககளுக்கு தனிக்கவனம் அளிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கோவை சர்வதேச விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டப்போது,

கோவையில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விமான பயணிகளை கவனிக்கும்முறை குறித்து சமீபத்தில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.



அதில் முதியவர்கள், மகப்பேறு பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் விமான பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் நலன் கருதி் அவர்களுக்கு தனி கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கோவை விமான நிலையத்தில் தற்போது இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி விமான நிலைய ஊழியர்கள் மேற்குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த பயணிகளை வரவேற்று, அவர்களின் தேவையை கேட்டறிந்து அதற்கேற்ப தேவையான உதவிகளை செய்து தருவார்கள்.

குறிப்பாக, முதியவர்களின் உடைமைகளை எடுத்து செல்லுதல், முதியவர்களை கைதாங்கலாக அன்புடன் அழைத்து செல்லுதல் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் சிரமமின்றி விமான நிலைய வளாகத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே பயணிகள் மத்தியில் இதற்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும் மேலும் சிறப்பாக இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும், என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...