பழைய 4 சக்கர வாகன விற்பனையாளர்களுடன் கோவை போலீசார் கலந்துரையாடல்

கோவையில் பழைய நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்துரையாடல் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவையில் கடந்த தீபாவளி முதல் நாள், கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தை, தொடர்ந்து என்.ஐ.ஏ வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், பழைய கார் விற்பனையகத்திலிருந்து வாங்கியது தெரியவந்தது. இதனால் ஏற்கனவே மாநகர போலீசார் பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.



அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகரில் உள்ள பழைய நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் கடை உரிமையாளர்களுடன் மாநகர போலீசார் கலந்தாலோசனை மேற்கொண்டனர்.

அப்போது, ஒவ்வொருவரும் தாங்கள் வாங்கும் பழைய வாகனங்களின் முழுமையான சான்றிதழ்களை சரிபார்த்து வாங்க வேண்டும். சந்தேகப் படும்படியான வாகனங்கள் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என போலீசார் கேட்டுக் கொண்டனர்.

மேலும், இந்த பணிகளில் என்னென்ன சிக்கல் உள்ளது என்பது குறித்தும் பழைய வாகன விற்பனையாளர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...