உடுமலையில் நடுகல் வழிபாடு - வரலாற்று ஆய்வாளர்கள் களஆய்வு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பாரம்பரியமான கோயில்களில் உள்ள நடுகல்களை வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்தனர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாரம்பரிய நடுகல் வழிபாட தொடர்பான சின்னங்களை வரலாற்று ஆய்வுத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

மடத்துக்குளம் தாலுக்கா நரசிங்கபுரத்திலிருந்து கருப்புசாமி புதூருக்கு செல்லும் சாலையில், பாரம்பரியமிக்க கோயில்களில் நடுகற்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.



இதையடுத்து, வரலாற்று ஆய்வாளர்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள கோயிலின் கட்டிடத்திற்குள் இருக்கும் நடுகற்களை கன்னிமார் சாமி என்றும், அதற்கு அருகில் இலந்தை மரத்தின் அடியில் இருக்கும் நடுகற்களை வீரமாத்தி அம்மன் என்றும், எதிரில் இருக்கும் பெரிய அளவிலான சுமார் 5 அடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட நினைவு நடுக்கற்களை மாலையம்மன் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆய்வு நடுவர் ஆய்வாளர்கள் விஜயலட்சுமி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை வரலாற்று ஆசிரியர் ராபின் கேட்டபோது,

நடுகல் வழிபாடு என்பது கொங்கு நாட்டில் பண்டைய மக்கள், இனக்குழுக்களாக வாழ்ந்து கால்நடைகளை சொத்துக்களாகவே வளர்த்து வந்துள்ளனர். இன குழுக்களின் பிரிவுகளிடையே மற்றொரு குழுவினர் கால்நடைகளை கவர்ந்து செல்வது, அவ்வாறு கவர்ந்து செல்லப்பட்ட கால்நடைகளை வீரம் செறிந்தவர்கள் மீட்டு வருவார்கள்.

இந்த கால்நடை மீட்பு போர்க்களத்தில் இயற்கைக்கும் வீரர்களுக்கும் நடுகற்கள் வைக்கப்படும் நடைமுறை இருந்தது. இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் ஈந்து கல்நட்டு வழிபடுவதும் பண்டைய தமிழ் மரபு, என்றனர்.

இதற்கிடையில், உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் பாரம்பரியமான வரலாற்று பொக்கிஷங்கள் சிதலமடைந்து காணப்படுவதால், தொல்லியல் துறையினர், அவை குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...