நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் உதகையில் மனிதநேய வார விழா உற்சாக கொண்டாட்டம்

உதகை அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மனிதநேய வார விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகையில் அருகேயுள்ள மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மனிதநேய வார விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த முத்தொரை பாலாடா பகுதியில் மத்திய அரசின் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக இன்று மனித நேய வார விழா கொண்டாடப்பட்டது.



காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் கலந்து கொண்டு மாணவர்கள் இடையே சிறப்புரையாற்றினார்.



இந்த நிகழ்ச்சியில் உதகை நகர் டிஎஸ்பி யசோதா, உதகை ஊரக டிஎஸ்பி விஜயலட்சுமி, நஞ்சநாடு பஞ்சாயத்து தலைவர் சசிகலா, தோடர் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர், சிவக்குமார், அரசு வழக்கறிஞர் முகமது மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...