உடுமலையில் வேளாண் கண்காட்சி இன்று தொடக்கம்

உடுமலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் இன்றும் தொடங்கும் வேளாண் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்ட விவசாயிகள்.



திருப்பூர்: உடுமலையில் இன்று தொடங்கிய வேளாண் கண்காட்சியில் விவசாயம் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் அணை நீர், மற்றும் கிணறு பாசனத்தை நம்பி பல்வேறு விவசாய சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக சுற்றுப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் உடுமலையில் உள்ள தேஜஸ் மகாலில் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சி இன்று முதல் வருகிற 30ஆம் தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.



கண்காட்சியில், வேளாண்துறை, பட்டு வளர்ச்சி துறை, தோட்டக்கலை துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் நவீன வேளாண்மை கருவிகள், மருத்து தெளிக்கும் கருவி, தேங்காய் பறிக்கும் கருவி, டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூள் தூளாக்கும் கருவி, மாட்டுத் தீவன எந்திரம், மரச்செக்கு எண்ணெய், புதிய தொழில் நுட்பத்தில் தேங்காய் உரிக்கும் நவீனஎந்திரம் என்று பல்வேறு கருவிகள் இடம் பெற்றன.



நர்சரி பண்ணை, புல்பிடுங்கும் எந்திரம், தோட்டக்கலை சம்பந்தமான செடிகள், நர்சரிகள் மற்றும் கால்நடை சம்பந்த மான கருவிகள், மல்பெரி சம்பந்தமான அரங்குகள் உள்பட பல்வேறு அரங்குகள் அரசு மற்றும் தனியார் துறை மூலம் இடம் பெற்றுள்ளன.

கோவை, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்படும் விவசாய கண்காட்சி உடுமலையில் நடைபெறுவதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்காட்சியைக் கண்டுகளித்து தங்களுக்கு வேண்டிய விவசாய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...