வால்பாறை அருகே அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி.


கோவை: கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் வனப்பகுதியில் திடீர் தீ விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.



ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினருக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வனப்பகுதியில் தீ பிடித்தால் எவ்வாறு தீயைக் கண்டறிவது, அதை எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்புத் துறையினர் மூலம் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனப்பகுதியில் திடீர் தீ போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம், ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குநர் தலைமையில் வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் வனப்பகுதியில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.



மேலும் வனப்பகுதியில் உயிருக்குப் போராடும் வண்ணம் மனிதர்கள் இருந்தால் அவர்களை முதல் உதவி அளிப்பது, எவ்வாறு காப்பாற்றுவது என்றும் வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் ஆனந்தி விளக்கப் பயிற்சி அளித்தார்.



இதில் 100-க்கும் மேற்பட்ட வனசரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...