நீலகிரியில் ரூ.17.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - திமுக எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்பு

கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்பில் 465 பயனாளிகளுக்கு ரூ.17.50 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் வழங்கினர்.


நீலகிரி: கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.17.50 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை திமுக எம்.பி. ஆ.ராசா மற்றும் அமைச்சர் கா.ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கினர்.



நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள நர்த்தகி திருமண மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் மாபெரும் மருத்துவ முகாமினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், சமூக நலத்துறை, சத்துணவு திட்டத்தின் கீழ், தேவர் சோலை, ஸ்ரீ மதுரை, மசினகுடி, மச்சக்கொல்லி, புளியம் பாறை, தேவாலா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

அதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சேரன் கோடு ஊராட்சி அய்யன் கொல்லியில் கிராம சந்தை கட்டிடம் உள்ளிட்ட ரூ.98.65 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை, பேரூராட்சிகள் துறைகள் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டனர்.



இதையடுத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 465 பயனாளிகளுக்கு ரூ.17.50 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...