சமத்துவ கழக இளைஞர் அணி சார்பில் ரயில்நிலையம் முற்றுகை போராட்டம்


பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடக்கோரி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்திய சமத்துவகழக இளைஞர் அணியினர் 68 பேர் கைது

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்றைக்கு கொண்டாடப்படும் சூழ்நிலையில் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து சாதியற்ற சமத்துவ சமூகம்  இந்தியாவில் உருவாக்கிட காதல் திருமணத்தை பாதுகாக்க சட்டம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ கழக இளைஞர் அணியின் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடவும், தமிழகத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலைகளை தடுத்திடக்கோரியும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடக்கோரியும் வலியுறுத்தி ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 7 குழந்தைகள் உட்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. காதல் திருமணம் புரிந்து கொண்ட புது ஜோடிகள் மற்றும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டி குடும்பத்தோடு கொண்டாடினார்கள். காதல் திருமணங்கள் தான் சாதி, மதத்தை அழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்கும் என்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...