திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கான்கிரீட் சிலாப் விழுந்ததில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்..!

உடுமலை அடுத்த குமரலிங்கம் பகுதியில் கான்கிரீட் சிலாப் விழுந்ததில் படுகாயம் அடைந்த பிரகலாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் குமரலிங்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ்(48). இவருக்கு உடுமலை - பழனி சாலையில் சொந்தமான ஒரு கட்டிடம் இருந்து வந்தது.

இந்த கட்டிடத்தில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சுவர் அகற்றப்பட்டு மேற்புறத்தில் கான்கீரிட் சிலாப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த சிலாப் கட்டிடத்துடன் சரியாக பொருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உரிமையாளர் சுப்புராஜ், குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மேசன் பிரகலாதன்(45) மற்றும் மணிகண்டன்(55) ஆகியோர் கான்கிரீட் ஸ்லாப்பின் கீழ் அமைக்கப்பட்டு இருந்த தாங்கு கட்டைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது எதிர்பாராத விதமாக கான்கிரிட் ஸ்லாப் சரிந்து மூன்று பேர் மீதும் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலத்த காயமடைந்த பிரகலாதன் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரகலாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...