உடுமலையில் விவசாய கண்காட்சி: கோவை வேளாண் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் கோவை வேளாண் கல்லூரி மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பார்வையாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் விவசாய கண்காட்சி நேற்றைய தினம் (28.01.2023) தொடங்கியது.



வரும் 30ஆம் தேதி வரை இந்த விவசாய கண்காட்சியானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர்கள் அபிஷேக், அருண், அஸ்வின், இலியாஸ்,மௌலி தர்ஷன் மற்றும் நந்த குமார் ஆகியோர் கண்காட்சியில் பொருள் விளக்க செயலில் ஈடுபட்டனர்.



இந்த கண்காட்சியில் மல்பெரி மற்றும் எரி பட்டுப்புழு வளர்ப்பு, மானிய திட்டங்கள் மற்றும் மல்பெரி பழச்சாறு, ஜாம், கூட்டுப் புழு சோப்பு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



பட்டுப்புழுவியல் துறை தலைவர் மற்றும் உதவி இயக்குநர் மனிஷா ஆகியோரின் ஆலோசனையின்படி எரி பட்டுப்புழு வளர்ப்பு குறித்த சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளனர். இந்தக் கண்காட்சியை பட்டுப்புழு மற்றும் வேளாண்மை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...