பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜை: பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டி மாணவர்கள் சிறப்பு வழிபாடு

கோவை பொள்ளாச்சியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஹயக்ரீவர் சரஸ்வதி பூஜையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டி மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்று வழிபாடு.


கோவை: தமிழகத்தில் வரும் மார்ச் மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளன.



இந்நிலையில், மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டியும், ஞாபகத்திறன் அதிகரித்து சிறந்த முறையில் தேர்வு எழுதி எல்.கே.ஜி முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கல்லூரி தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டியும் பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஹயக்ரீவர் சரஸ்வதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



இதில், மாணவ-மாணவிகள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து ஹயக்ரீவர் மந்திரங்களை கூட்டாக படித்தனர்.



இந்த சிறப்பு வழிபாட்டில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...