தமிழக-வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல்போக்கு: சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தினரே காரணம் - காடேஸ்வரா சுப்ரமணியம்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டினரே வடமாநில மற்றும் தமிழக தொழிலாளர்கள் இடையே மோதல் போக்கை உருவாக்குவதாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த யூனியன் மில் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.



இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



இந்த பொதுக்குழு கூட்டத்தில் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு உள்ள குளறுபடிகளை தமிழக அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசியதாவது,



திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள பங்களாதேஷ் உள்ளிட்ட நாட்டைச் சேர்ந்தவர்கள் அமைதியை சீர்குலைக்க வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழ் மாநில தொழிலாளர்களுக்கு இடையே மோதல் போன்ற போக்கை உருவாக்கி வருகின்றனர்.

உடனடியாக காவல்துறையும் உளவுத்துறையும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் மூலம் பயனடைவதன் காரணமாகவே அந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்து வருகிறார். பழனி கோவிலில் ஆகம விதிகளின் படி கும்பாபிஷேக விழா நடத்தப்படாததன் காரணமாக தமிழக அரசுக்கு கெட்ட காலம் துவங்கி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...