திருப்பூர் உடுமலை பேருந்து நிலையத்தில் அன்னதான திட்டம் - அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்

உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி என்ற தொண்டு அமைப்பின் சார்பில் ஆண்டு முழுவதும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான கொழுமம், குமரலிங்கம், ருத்ராபாளையம், கல்லாபுரம், அமராவதி நகர், ஆண்டிகவுண்டனூர், தளி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை பேருந்து நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.



இந்த நிலையில் உடுமலை ரோட்டரி கேலக்ஸி சார்பாக அன்னமித்ரா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.



இத்திட்டத்தின் கீழ் வருடம் 365 நாட்களும் உணவு இல்லாதவர்களுக்கு மதிய உணவு அளிக்கப்பட உள்ளது.

இதன் துவக்க விழாவில் ரோட்டரி உடுமலைபேட்டை கேலக்ஸி தலைவர் பொன்ராஜ், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தின், முன்னாள் நகர மன்ற தலைவர் வேலுச்சாமி மற்றும் ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் என் ஆர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...