கோவை பிச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பிச்சனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், குடும்பத்துடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பிச்சனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு தேவையான அனைத்தும் செய்து தருவதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

பிச்சனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் 1997- 1998-ல் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.



கிராமப்புற பள்ளி என்பதால் அப்போது பள்ளிக்கு வரும் போது செய்த சேட்டைகள், மரத்தடி நிழலில் அமர்ந்து அரட்டை, ஒரே தட்டில் உணவு, சிறு வயது காதல் கதைகளையும் பேசி மகிழ்ந்தனர்.

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 25 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய ஆசிரியர்களையும் பூ கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கினர்.



பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவ, மாணவிகள் பள்ளி சீருடை போல ஒரே மாதிரி உடையை அணிந்து வந்து தாங்கள் படித்த வகுப்பறையில் அமர்ந்து கேலி, கிண்டல் அடித்து மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஒரே தட்டில் உணவு சாப்பிட்டும், ஊட்டி விட்டுக் கலகலப்பாகக் கொண்டாடினர்.



இதே போல தங்கள் படித்த 1998 ஆண்டு மாணவர்கள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், போலீஸ், விவசாயம் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவதாகத் தெரிவித்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான வசதிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...