கோவை வால்பாறை அருகே யானை பார்த்து பயந்து ஓடிய வடமாநில பெண் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் வடமாநில பெண் ஒருவர் விறகு எடுக்கச் சென்ற நிலையில் யானையைப் பார்த்து பயந்து ஓடிய போது கிழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் யானை பார்த்து தடுமாறியதில் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மதியம் 12 மணியளவில் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பெண்கள் விறகு எடுக்கச் சென்று உள்ளனர்.

அப்போது வனப்பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நின்று உள்ளது. யானையைப் பார்த்த அவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடி வந்து உள்ளனர். இதில் லில்மானிகிஷ்கு என்பவர் கீழே விழுந்ததில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சக பெண்கள் அவரை காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

உடலில் காயங்கள் உள்ளதால் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...