கோவை காரமடையில் கஞ்சா கடத்தல் - பெண் உட்பட மூன்று பேர் கைது

காரமடை அருகே போலீசாரின் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் சென்ற பெண் உட்பட மூவர் கைது.


கோவை: காரமடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் காரமடை நகராட்சி அலுவலகம் முன்புள்ள பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் நடமாடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கி சோதனை செய்துள்ளனர். அதில் அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், அவர்கள் சேலம் வரடேரிகாடு பகுதியை சேர்ந்த சாந்தி(35), ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கோஷடி மரிநியா(28), சதீஸ்காகாரா என்பதும், மூவரும் 3 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக காரமடை கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...