கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

கோவை வெள்ளலூர் பேரூராட்சியை சேர்ந்த 23 விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சியைச் சேர்ந்த சுமார் 23 பேர், இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு ரயில் கவிழ்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல 12 விடுதலை போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளனர்.

அந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுடன் இணைந்து தியாகிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கப்பட்டன.



இந்த விழாவில், விடுதலை போராட்ட தியாகி வி.என்.அருணாச்சலம் நினைவை கூறும் வகையிலான அவரது வரலாறுகளைக் குறிக்கும் புத்தகம் வெளியிடப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமார், எழுத்தாளர் வேலாயுதம், கவிஞர் வடிவேலு மற்றும் முன்னாள் விடுதலை போராட்ட தியாகிகள் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...