திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 54 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன.


திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 54 வகையானஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள்கணக்கிடப்பட்டது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பானது, ஏரிகள் மற்றும் குளங்களில் இன்று நடைபெற்றது.

இதன் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்திற்குட்பட்ட 20 குளங்களில் (என். மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டு குளம், பெரியகுளம், செங்குளம், ராய குளம், தேன் குளம், சின்ன ஆண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக் குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம், உப்பார் டேம் போன்ற குளங்களில் இந்த பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.



இதில் வனத்துறை பணியாளர்கள் தன்னார்வு தொண்டு நிறுவனர் ரவீந்திரன் தலைமையிலான குழுவும் மற்றும் ஆர்ஜிஎம் பள்ளி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று பறவைகள் கணக்கெடுப்பு குறித்து அனைவருக்கும் பயிற்சி மற்றும் கணக்கெடுப்பிற்குத் தேவையான தரவு புத்தகம் போன்றவை வழங்கப்பட்டது.



நீர்நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகிலுள்ள உள்ள புதர்களில் உள்ள பறவைகள் போன்றவை இதில் கணக்கிடப்பட்டது.



உடுமலைப்பேட்டை பெரிய குளத்தில் கணேஷ் ராம், உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர், சிவக்குமார் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மகேஷ் குமார், உயிரியலாளர், நரசிம்மன், வேட்டை தடுப்பு காவலர், கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன், RGM பள்ளி மாணவர்கள் பங்கேற்று சுமார் 54 வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் கணக்கிடப்பட்டது.



அதில் நத்தை குத்தி நாரை, புள்ளி மூக்கு வாத்து, சிகப்பு மூக்கு ஆள்காட்டி, பாம்பு தாரா, நீர் கக்கா, சாம்பல் நாரை, செந்நீல நாரை, நீல தாலை கோழி, நாம கோழி, தாமரை கோழி, மண் கொத்தி, சிறிய நீல மீன்கொத்தி, முக்குளிப்பான், வெள்ளை அரிவாள் மூக்கன், நீல வால் கீச்சன், தவிட்டு குருவி, செம் பருந்து, செண்பகம், மஞ்சள் வாலட்டி, மைனா, பச்சை கிளி, கரிச்சான், நீல வால் பஞ்சுருட்டன், தையல் சிட்டு, ஊதா தேன்சிட்டு, கதிர் குருவி, சிட்டு குருவி, குயில், கவுதாரி, பனை உழவாரன், வால் காக்கை, சின்ன கீழ் க்கைக் சிறகி, சூரமாறி, பொறி மண் கொத்தி, பொறி வல்லூறு, குள்ளத் தாரா போன்ற பலவிதமான பறவைகள் கணக்கிடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...