திமுக அமைச்சர்கள் ரவுடிகள்?! - பாஜக மாநிலத் துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கையை காலை வெட்டுவது, கல் எறிவது, கொலை செய்வேன் என மிரட்டுபவர்கள் எல்லாம் திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருப்பதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டியுள்ளார்.



கோவை ஆர். எஸ்.புரம் பொன்னையா ராஜபுரம் பகுதியில் கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவரும் ஊடகப் பொறுப்பாளருமான நாராயணன் திருப்பதி கலந்து கொண்டு, பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் திருப்பதி பேசுகையில்,

திமுக எம்பி டி ஆர் பாலு அவர்கள் வீரமணி மீது கை வைத்தால் வெட்டி விடுவேன் என்று கூறியுள்ளார். ஸ்டாலினை தீண்டினால் கையை வெட்டுவேன் என்று சொல்லி உள்ளார். கையை காலை வெட்டுவது, கல்லை தூக்கி எறிவது, அண்ணாமலை அவர்களை கொலை செய்வேன் என்று மிரட்டுவது இதையெல்லாம் சொல்வது ரவுடிகள் அல்ல, அவர்கள் அனைவரும் இன்றைக்கு திமுகவில் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்கள்.

இதுபோல பேசியிருப்பது அனுபவம் வாய்ந்த ஒரு மக்களவை உறுப்பினர். இன்றைக்கு தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியல் செய்து கொண்டிருக்கிற திராவிட மாடல் என்ற பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. இதேபோல பேசியவர்கள் பட்டியலில் தா.மோ. அன்பரசன், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆவடி நாசர் என நீண்டு கொண்டே இருக்கிறது என்று நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், டி ஆர் பாலுவுக்கு என்ன பிரச்சனை? ராமர் பாலத்தை அகற்ற வேண்டும் என்று கூறி வருகிறார். ராமர் பாலத்தையும் கோவிலையும் இடிப்பது என்று இருக்கின்றார். இப்படி இடித்தால் ஓட்டு விழாதா என ஆணவத்தோடும் பேசுவது நல்லதல்ல.

இதேபோலதான் கனிமொழி மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதே இல்லை என்று கூறுகிறார். கிட்டத்தட்ட முழுமையாக இந்தியாவில்தான் அதிகம் இளம் விதவைகள் இருக்கிறார்கள் என்று சொன்ன கனிமொழி, மதுவை குறைப்போம் என்று சொல்லவில்லை என கூறி வருகிறார்.

கல்வியில் காசு என அனைத்து துறைகளிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இதை அண்ணாமலை தலைமையில் கடுமையாக எதிர்ப்போம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்போம். ராமர் பாலத்தை எந்த காரணத்தைக் கொண்டும் இடித்துவிட்டு சேது சமுத்திரத் திட்டத்தை வரவிடமாட்டோம். ஆனால் டி ஆர் பாலு பேசுகிறார், நான் சாபம் கொடுக்கிறேன்.

அந்த இடத்தில் அவருக்கு தேவை உள்ளது. அனைத்திலும் தொடர்புள்ளது. யுரேனியம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட பல லட்சம் தாது மணல் எங்கே சென்றது. அதில் வந்த பணம் எவ்வளவு? எத்தனை கருவூலத்தில் சேர்த்தார்கள்? அதற்கு பதில் சொல்ல வேண்டும். திமுக அரசு மிகப்பெரிய கொள்ளை அடித்து வருகிறது. தான் மட்டும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் சம்பந்தமாக பேசிய நாராயணன் திருப்பதி, கே எஸ் அழகிரி கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். கழட்டி பார்த்தால் தான் தெரியும். பிபிசி என்பது ஆவணப்படம் அல்ல அது ஆணவப் படம்.

கம்யூனிஸ்டுகளுக்கு மானமரியாதை இருந்தால் இப்படி பேசுவார்களா? திருமாவளவன் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொள்கிறார். தமிழ்நாடு, தமிழகம் என இருந்தால் நல்லது என்று அண்ணாதுரை கூறியுள்ளார், கலைஞர் கூறியுள்ளார், ஆளுநர் கூறியதில் என்ன தவறு?

அதானியை பொறுத்தவரை அவர் ஒரு வியாபாரி. அவர் மேலே வருவார் கீழே செல்வார். அவருக்கு நஷ்டம் வந்தால் அது அவருடையது. வேண்டுமென்றே எல்ஐசி போன்ற பிரச்சனைகளை இழுக்கிறார்கள். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...