இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்..! - ஜவாஹிருல்லா நம்பிக்கை

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் ஹோட்டலில் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ம.ம.க மாநில தலைவரும், பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகள் என அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.

அனைவரும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலைப் பொறுத்தவரை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக முன்னேறி செல்கிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக இன்று வரை வேட்பாளரை அறிவிக்க முடியாத சூழலில் இருந்து வருகிறது, என்றார்.

பிபிசி வெளியிட்டுள்ள காட்சிகள் சம்பந்தமான கேள்விக்குப் பதிலளித்த ஜவாஹிருல்லா, இதற்கு முன்னரே கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது முஸ்லிம் இனப்படுகொலை பற்றி பிபிசி அம்பலப்படுத்தி உள்ளது. பிரிட்டனில் வசித்த முஸ்லிம்கள் தங்களுடைய உறவினர்கள் கொல்லப்படுவதாக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதனை தொடர்ந்துதான் பிபிசி அதற்கான ஆதாரங்களை வெளியிட்டது.

இந்த சூழ்நிலையில், அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அப்போதே மோடியிடம் ராஜதர்மத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு செய்யவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், குற்ற வழக்குகள் உட்பட பல்வேறு சம்பங்களில் ஈடுபட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கான ,ஒரு குழுவையும் நியமித்து நாங்கள் அந்த அறிக்கையை கொடுத்துள்ளோம். விரைவில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

வரவுள்ள 2024 பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நிச்சயமாக நம்முடைய ஆட்சி கூட்டாட்சி அங்கு வரும். அப்பொழுது மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் நேரடியாக மக்களுக்கு சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...