கோவை கணபதியில் போக்குவரத்து மாற்றம் - மாநகர போலீசார் அறிவிப்பு!

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து சங்கனூர் சாலைக்கு தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் (கண்ணன் பல்பொருள் அங்காடி) வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறமாகத் திரும்பி, டெக்ஸ்டூல் பாலத்தின் பயன்பாட்டுச் சாலையில் நுழைந்து‘யு’டர்ன் எடுத்து பயணத்தைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து தமிழ்நாடு பேருந்து நிலையம் வழியாக காந்திபுரம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் பகுதியில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கத்திலுமே இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...