வால்பாறையில் மனிதநேய வார விழா கொண்டாட்டம் - பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்பு!

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார விழா நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலை கல்லூரியில் மனித நேய வார விழா நடைபெற்றது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத்துறை சார்பாக பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதியில் இந்த விழா நடத்தப்பட்டது.



இதில், ஆதிதிராவிடர் நல பள்ளி மற்றும் பழங்குடியினர் பள்ளி என 9 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் இணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மனித நேயத்தை பற்றி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் தலைமையில் 6 பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களில் மக்கள் குறை திறப்பு முகாம் நடைபெற்றது.



வன பகுதியில் செல்ல சாலை வசதி வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வேண்டும்,பழங்குடி கிராமங்களுக்கு மின் இணைப்பு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சார் ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர். பின்னர் பேசிய சார் ஆட்சியர், பழங்குடியின மக்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...