உடுமலையில் புதுப்பிக்கப்பட்ட 120 ஆண்டு பழமையான பள்ளிவாசல் திறப்பு - அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டது. இந்த விழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் முதல் மற்றும் இரண்டாம் நகர மன்றத்தலைவர் ராவ் பகதூர் சையது திவான் அப்துல் ரசாக் மற்றும் கான் பகதூர் ஜனாப் சையது திவான் மொகிதீன் சாகிப் பாட்சா ஆகியோர், உடுமலைப்பேட்டை நகராட்சியில் 1917 முதல் 1928 வரை நகர மன்றத் தலைவர்களாக இருந்து மக்களாட்சி நடைபெற்றது.



மேலும், சோழிய கவுண்டர் இறப்பின்போது ஒவ்வொரு பள்ளி வாசலிலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தப்பள்ளிவாசலிலும் சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டதாக உடுமலை வரலாற்று நூல் தெரிவிக்கிறது.



வரலாற்று சிறப்பும் சமூக ஒற்றுமையும் நிறைந்த பாரம்பரிய மிக்க 120 ஆண்டு கால ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் புதுப்பிக்கபட்ட பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில், செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உடுமலையில் 120 ஆண்டுகள் பழமையான ஜாமியா மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழக முதல்வர் சார்பிலும் எனது தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.



திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி அரபி கல்லூரி அன்வாலூர் உழும் அரபிக் கல்லூரி முதல்வர் ரூ ஸுல் ஹக், முன்னாள் அமைச்சர் உடுமலைக்கு ராதாகிருஷ்ணன் , நகர திமுக செயலாளர் சி வேலுச்சாமி , அதிமுக நகர செயலாளர் ஹக்கீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில், சுமார் 3000 பேருக்கு அறுசுவை பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...