ராகுல்காந்தி ஒற்றுமை பயணம் நிறைவு - பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் நிறைவடைந்ததை ஒட்டி பொள்ளாச்சியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.



கோவை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை கடந்த ஒற்றுமைப் பயணத்தை ஸ்ரீ நகரில் ராகுல்காந்தி நிறைவு செய்தார். ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழாவாக நாடு முழுவதும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள், காங்கிரஸ் சார்பில் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமையில் பொள்ளாச்சி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...