வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி

கோவை மாவட்டம், வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் தவிர பொதுமக்கள் கேள்வி கேட்டதால் கூட்டம் பாதியில் நிறுத்தம்.



கோவை: வால்பாறை நகரமன்ற கூட்டத்தில் திடீரென நுழைந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகரமன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் ஆணையாளர் பாலு மற்றும் பொறியாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் வார்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அவர்களது வார்டு பகுதியில் உள்ள பிரச்சினைகளைப் பேசி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று வால்பாறை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நகர மன்றம் கூட்டு அரங்கத்தில் நுழைந்தனர்.



நகர மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் பாலுவிடம் 10 மாதங்கள் ஆகியும் மக்கள் பணிகளைச் செய்யவில்லை, சாலை வசதி, தெருவிளக்கு குடிநீர் போன்ற தேவைகளுக்கு நகராட்சியில் வேலைகளுக்கு பலகோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை வேலைகள் நடக்கவில்லை என்று புகார்கள் எழுப்பினர்.



இதை தொடர்ந்து கவுன்சிலர்கள் நகரமன்ற கூட்டத்தில் பொதுமக்கள் எப்படி வருகிறார்கள், இது நகரமன்ற கூட்டமா? இல்லை பொதுக்கூட்டமா? என்று கேள்வி எழுப்பி கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் நகரமன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...