பொருளாதார மந்த நிலையால் ஆட்குறைப்பு அதிகரிக்கும் - கோவை தொழில் துறையினர் தகவல்!

பொருளாதார மந்த நிலையால் தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகரிக்கும் என்று கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: தொழில் நகரான கோவை உற்பத்தி, சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வறு மாநிலங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.



உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம், இந்தியாவில் தென்பட தொடங்கியுள்ளதாகவும், இதனால் கோவை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை அதிகரிக்கும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்க (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது:

உலகளவில் பல நாடுகளில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் தற்போது தெரியவருகிறது. சந்தையில் மக்களின் வாங்கும் திறன் கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் வணிகம் மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் கடந்த பல மாதங்களாக 30 முதல் 40 சதவீதம் வரை பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் மாதத்துக்குப்பின் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மந்தநிலையின் தாக்கம், கோவையில் இருக்கும். அதற்கு பின் நிலை சீரடைய வாய்ப்புள்ளது. ஆட்குறைப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.



இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) கோவை மாவட்ட தலைவர் பிரசாந்த் கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி ஆணைகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

இருப்பினும் அதிக வளர்ச்சி இருக்கும் என்ற நோக்கத்தில் தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே தற்போதுள்ள சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களை குறைக்க நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...