கோவை சாய்பாபா கோவிலில் பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்

மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோவை சாய்பாபா கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.



கோவை: கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின், பழனி முருகன் கோவில் பாதயாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைக்கிறார்.

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து இன்று மாலை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளார்.



பாதயாத்திரையில் பாஜகவினர் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பாதயாத்திரை துவக்கி வைப்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை வருகை தந்தார்.



இந்நிலையில் ஈச்சனாரி கோவிலுக்கு செல்லும் முன்பாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்த சாய்பாபா கோவிலில் 20 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...